Awards Received as a recognition of our Service
பதிப்பக துறையில் சிறந்த சேவை புரிந்து வருவதற்கான கீழ்க்கண்ட விருதுகளை "அகஸ்தியர் பதிப்பகம்" பெற்றுள்ளது.
அகஸ்தியர் பதிப்பகம் 1994-இல் வி.ஜி.பி. அறக்கட்டளை சார்பில் அன்றைய தமிழத்தின் நிதிஅமைச்சர் திரு.வி.ஆர். நெடுஞ்செழியன் அவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.
திருச்சி "சிட்டி கல்சுரல் அகாடமியினரால்" ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் விழாவில் "சிறந்த பதிப்பகத்தார்", "சிறந்த புத்தக நிலையம்" என்ற இரு விருதுகளையும் இருமுறை தொடர்ந்து 1994 மற்றும் 1995-இல் இப்பதிப்பகம் பெற்றுள்ளது.
1996-இல் மதுரை ஆதீனம் 292-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞான சம்பந்த தேசிகர் "பதிப்பக ஞானபானு" என்ற விருதை திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கினார்.
1997-இல் காஞ்சி மடாதிபதிகளான பூஜ்ய ஸ்ரீ - ஜெயேந்திரர், விஜயேந்திரர் இருவரின் பொற்கரங்களால் "ஹிந்தி பிரசார மாமணி" என்ற பட்டம் திரு.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு மும்மொழி சொற்களஞ்சியம் வெளியிட்டமைக்கு வழங்கப்பட்டது.
1999 - இல் பூஜ்ய ஸ்ரீமகா பெரியவரின் நூற்றாண்டு அறக்கட்டளை சென்னையில் ஏற்பாடு செய்திருந்த விழாவில் "சேவா ரத்னா" என்ற விருதை எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியது.
"அவார்ட் பார் எக்ஸலன்ஸ் இன் பப்ளிசிங்" என்ற விருது தி ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, நியூ டெல்லி - ஆல் வழங்கப்பட்டது.
2001 - இல் மும்மொழி சொற்களஞ்சியம் வெளியிட்டதை பாராட்டி மெட்ராஸ் தெலுங்கு அகாடமி சார்பில் "யுகாதி புரஸ்கார்" என்ற விருதினை அன்றைய ஆந்திர ஆளுநர் திரு.சி.ரங்கராஜன் அவர்கள் வழங்கினார்.
2007 - இல் சென்னை புத்தக கண்காட்சி அமைப்பு (BAPASI) "சிறந்த புத்தக விற்பனையாளர்" என்ற விருதினை அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் கரங்களால் பெற்று தந்தது.
மாணவ, மாணவிகளின் நன்மதிப்பு, ஊக்கம் மற்றும் வாடிக்கையாளர்களின் வரவேற்பு ஆகியவற்றால் இப்பதிப்பகம் வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழா கண்டு தற்போது பவளவிழாவில் அடியெடுத்து வைக்கிறது
திருச்சி தெப்பக்குளம் அகஸ்தியர் புக் டெப்போ மற்றும் அகஸ்தியர் பதிப்பகம் வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஹிந்தி உரை நூல்கள், ஸ்தோத்திர புத்தகங்கள், தமிழ்நாவல்கள், பொது அறிவு, உடல்நலம், சுயமுன்னேற்றம் பள்ளி, கல்லூரி பாடப்புத்தகங்கள், சிறுவர் இலக்கியம், சமையல் புத்தகங்கள் மற்றும் அனைத்து பதிப்பகத்தாரின் புத்தகங்களையும் சிறந்த முறையில் மொத்த மற்றும் சில்லரை விற்பனை செய்து வருகிறது. நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களும் வழங்கி வருகிறது.
அகஸ்தியர் பதிப்பகம் வெற்றிநடைபோட என்றுமே கடவுளின் அருளாசியையும் வாடிக்கையாளர்களின் நல்லாசியையும் வேண்டுகிறது.