logo
blog

75 ஆண்டு சேவையில் அகஸ்தியர் பதிப்பகம்

அகஸ்தியர் பதிப்பகம் மற்றும் புத்தக நிலையம், அரசியல் சாணக்கியர்.திரு.ராஜாஜி மற்றும் எழுத்தாளர் கல்கி அவர்களின் திருக்கரங்களால் 1944 - ஆம் ஆண்டு மே மாதம் எழுத்தாளர் கல்கியின் புனைப் பெயர்களுள் ஒன்றான "அகஸ்தியர்" எனப் பெயர் சூட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டது.
தந்தை ஸ்ரீ வி.சுப்பிரமணியன் துவக்கிய பதிப்பகத்தை தனயன் எஸ்.கோபாலகிருஷ்ணன் தொடர்ந்து சிறப்பாக நிர்வகித்து இன்றுவரை வாடிக்கையாளர்களின் திருப்தியையே தனது லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருவது இந்நிறுவனம் பொன்விழா, வைரவிழா நிறைவுபெற்று தற்போது பவளவிழா ஆண்டு தொடக்கத்துக்கு வழிகோல்.
1993 - ஆம் ஆண்டு ஏப்ரல் 1 - ஆம் தேதி பொன்விழா வை சிறப்பித்தவர்கள் அப்போதைய மத்திய அமைச்சர்கள் திரு.பலராம் ஜாக்கர் மற்றும் திரு.கே.வி.தங்கபாலு.
75 வருடங்களாக இப்பதிப்பகம், மாணவ, மாணவியருக்கு பயனுள்ள பள்ளி மற்றும் கல்லூரி பாட புத்தகங்கள், உரைநூல்கள் வெளியிடுவதில் முன்னணியில் உள்ளது.
தக்ஷிண பாரத ஹிந்தி பிரசார சபா நடத்தும் ஹிந்தி தேர்வுகளுக்கான புத்தகங்களுக்கு உரைநூல்கள் வெளியிடுவதில் முதலிடம் வகிக்கிறது.
தேசிய ஒருமைப்பாடு என்ற இலட்சியத்தை மனதில் உறுதியாகக்கொண்டு திரு.எஸ்.கோபாலகிருஷ்ணன் 1995-இல் 'அகஸ்தியர் பதிப்பகத்தில்' வெளியிட்ட முழுமையான இந்தி-இந்தி, தமிழ், ஆங்கில சொற்களஞ்சியம். 15-வது பதிப்பு வெளிவந்துள்ளது. பல விருதுகளையும் பெற்றுள்ளது. டாக்டர் சீனி.சௌம்யநாராயணன் அவர்களை தலைமை பதிப்பாசிரியராக கொண்டு 10 திறமைமிக்க ஆசிரியர்களை கொண்டு 4 ஆண்டுகால விடாமுயற்சியால் அகஸ்தியர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது இந்த மும்மொழி சொற்களஞ்சியம்.
ஹிந்தி மொழி கற்பவர்களுக்கு ஒரு சிறந்த துணைவனாக, நல்லாசிரியராக விளங்குகிற மற்றுமொரு வெளியீடு. "ஹிந்தி" மொழியை தமிழ் மற்றும் ஆங்கிலம் மூலம் கற்க மற்றும் பேச" இதுவும் பதிப்பகத் துறையில் முத்திரை பதித்து உள்ளது
ஆன்மீக நூல்கள், சங்கீத புத்தகங்கள், "நலமிக்க வாழ்க்கைமுறை" காஞ்சி மாமுனிவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எண்ணற்ற ஸ்தோத்திர நூல்கள் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்புகளை பெற்றுள்ளது.
ஆன்மீக நூல்கள், சங்கீத புத்தகங்கள், "நலமிக்க வாழ்க்கைமுறை" காஞ்சி மாமுனிவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் எண்ணற்ற ஸ்தோத்திர நூல்கள் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்புகளை பெற்றுள்ளது.